**மூன்று நாட்களில் சாதனை வசூல்: கல்கி 2898 ஏடி வெற்றி**
![]() |
மூன்று நாட்களில் சாதனை வசூல்: கல்கி 2898 ஏடி வெற்றியின் புது மைல்கள் |
பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள "கல்கி 2898 ஏடி" திரைப்படம் மூன்று நாட்களில் சாதனை வசூலை கண்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள "கல்கி 2898 ஏடி" திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, துல்கர் சல்மான், மற்றும் ராஜமெளலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 191 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இரண்டாம் நாளில் ரூ. 298.5 கோடி வசூலித்த நிலையில், மூன்றாம் நாளில் மொத்தம் 415 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாபாரதத்தின் தொடர்ச்சியாக, அதில் உள்ள சில கதாபாத்திரங்களை புனைவு திரைக்கதையுடன் கலக்கி, 2898ஆம் ஆண்டின் பின்னணியில் கல்கி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் நாக் அஸ்வின். இதற்காக ஒரு புதிய உலகத்தையே உருவாக்கியுள்ளார்.
மகாபாரதத்தின் முடிவில் இருந்து, கலியுகத்தின் கல்கி அவதாரத்தை நோக்கி கதை நகர்கிறது. உலகம் அழிவின் விளிம்பில் இருக்க, கடைசி நகரமாக காசி உள்ளது. கங்கை வற்றி, குடிக்க தண்ணீர் கிடையாது, உலகத்தை காப்பாற்ற கடவுள் வர வேண்டும் என்பதாகக் கதைக்களம் அமைந்துள்ளது. அதில், அமிதாப் பச்சன் கதையின் முக்கியமான பாத்திரத்தில் குழந்தையை காப்பாற்றும் பணி ஆற்றுகிறார். கதை அவரைச் சுற்றியே நகர்கிறது.
முதல் பாகம் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கூட இரண்டாம் பாகத்திற்காகக் காத்திருக்கிறார் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார், இது எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Comments
Post a Comment